இது குறித்து ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இத்தகைய பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிபுணர் குழுவின் தலைவர் தாரா விஜேதிலக்க குறிப்பிட்டார்.
பரீட்சையை இரத்துச் செய்வதற்கு நிபுணர் குழுவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிலர் தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித அடிப்படையும் இல்லை என தாரா விஜேதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நிபுணர்குழுவிற்கு அவ்வாறானதொரு அதிகாரம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறு எங்கே நேர்ந்துள்ளது? அதற்கான காரணம் என்ன? போன்ற விடயங்கள் குறித்தே நிபுணர் குழு ஆராய்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.