அவுஸ்திரேலிய
தலைமை அமைச்சர் யூலியா கிலாட்டும், எதிர்க்கட்சி தலைவர் ரொனி அபோர்ட்டும்
கன்பராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த வேளையில் நிகழ்ச்சி
நடந்த மண்டபத்தை சூழந்து சிலர் ஆர்ப்பாட்டம் செய்தால் சுமார் அரைமணி நேரம்
ஆர்ப்பாட்டகாரர்களின் பொறிக்குள் சிக்கி கொண்டதாக ஒஸ்ரேலிய ஊடகங்கள்
தெரிவித்துள்ளன. பிரதமர் யூலியா கிலாட் ஒரு சிறிய கட்டிடத்தில் இருந்தவேளை
வெளியே நின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அக் கட்டிடத்தை சூழ்ந்துகொண்டனர்.
அவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பாதுகாப்பு அதிகாரிகள் யூலியா கிலாட்டையும், ரொனி அபோர்ட்டையும், அந்த
ஆபத்திலிருந்து வெகு சிரமத்தின் மத்தியில் காப்பாற்றியுள்ளனர்.
யூலியா கிலாட் ஒரு இனவாதி என ஆர்ப்பாட்ட காரர்கள் கோஷம் இட்டனர். ஆர்ப்பாட்டத்தை அடக்க முற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையில் மோதல்களும் ஏற்பட்டது. யூலியா கிலாட்டையும், ரொனி அபோர்ட்டையும் சுமார் 50க்கு மேற்பட்ட விசேட காவல்துறை அதிகாரிகள் பின்கதவால் மீட்டு சென்றனர். இதேவேளை யூலியா கிலாட்டைக் காப்பாற்ற ஒரு அதிகாரி அவரை தற தற என்று இழுத்துச் சென்றார். அவரின் வேகம் காரணமாக யூலியா கிலாட் சறுக்கிய வண்ணம் சென்றதும் படம் பிடிக்கப்பட்டது.