கொழும்பிலுள்ள இந்தோனேஷிய தூதுவராலயம் தர்மசிஷ்வ புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களிடம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்தோனேஷியாவிலுள்ள 48 முன்னணி
பல்கலைக்கழகங்களில் புகைப்படம், பொறியியல், கணக்கீடு, கணணி, சுற்றுலா
இஸ்லாமிய கற்கை, மருந்தகம், விஞ்ஞானம், சமூக முயற்சியாண்மை, பாரம்பரிய கலை,
இந்தோனேஷிய மொழி மற்றும் அரசியல், கைப்பணி, பாரம்பரிய மருத்துவம் மற்றும்
விவசாயம் போன்ற கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஒரு வருடம் அல்லது ஆறு மாதம் அல்லது மூன்று மாதங்களை கொண்ட இந்த கற்கை
நெறிகளை மேற்கொள்ள தெரிவு செய்யப்படுபவர்களுக்கு மாதாந்தம் சுமார் 230
அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படும்.
இந்த புலமைப்பரிசிலிலுக்கான விண்ணப்ப திகதி பெப்ரவரி 10ஆம் திகதி முடிவடையும் நிலையில் கற்கை நெறிகள் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. தர்மசிஷ்வ புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்தோனேஷியாவில் கற்கை நெறிகளை மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்டும் மாணவர்களின் பெயர் பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியாகும்.

இந்த புலமைப்பரிசில் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர்
இல.400/50, சரன வீதி கொழும்பு – 07 என்ற முகவரியிலுள்ள இந்தோனேஷிய
தூதுவராலயத்திடம் நேரடியாகவும் அல்லது 0112674337 / 0112685042 என்ற
தொலைபேசி இலக்கத்தின் மூலம் அல்லது
indocol@indonesia-colombo.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் தொடர்புகொள்ள முடியும்.