2011 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை
பெறுபேறுகளின் மாவட்ட தரநிலைகளில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பில்
ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணை குழுவின் அறிக்கையின்
படி மாவட்ட தரநிலைகளை சரிப்பார்க்கும் போது பிழைகள் ஏற்படவில்லை என்றும்,
இறுதியில் பரீட்சை பெறுபேறுகளை சீட்டுக்களுக்கு இறுதி செய்யும் போதே
தவறு நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தவறு பரீட்சை திணைக்களத்தினாலேயே சிறிது காலத்தில் தீர்க்கப்பட்டதாகவும் அந்த விசாரணை குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், பரீட்சை திணைக்களத்தினால் அவ்வாறு சரி செய்யப்பட்டதன்
பின்னர் வெளியிட்ட உத்தேச பெறுபேறுகளில் எந்த தவறும் இல்லை என்பது உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறன தவறுகள் இனிவரும்
காலங்களில் இடம்பெறாது தடுப்பதற்கு உடனடியாக அமுலாகும் வகையில்
திணைக்களத்திற்கு தொழிநுட்ப ஆலோசகர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்
என்றும் இந்த விசாரணைகுழு பரிந்துரை செய்துள்ளது.