எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா



இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும்பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபதுவயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கிஅவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சைஇருக்கிறது. அது எலுமிச்சை!


ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள்உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமானவாதமல்ல.100சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளஉண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின்இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள்உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப்பருகுவது. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன்மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக்அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும்.எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்குலெமனேட் தெரபி என்று பெயர். தேவையான அளவுஎலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில்கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான்இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம்பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல்உருவாவதை 1.00லிருந்து 0.13 விகிதமாகக் குறைவதுஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும்தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப்பழங்களில்கால்ஷியம் சத்துஅதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக்காரணமே,கால்ஷியம் ஆக்ஸலேட்தான். பெரும்பாலானோருக்குசிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம்.இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.
சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள்மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம்வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்குநகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்றஅறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரைஅணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில்உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப்பொருள்தான்இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில்சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில்தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன்உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள்உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள்என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்றதோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்றவகை அரிய கற்களும் சிறுநீரகத்தில்உருவாகின்றன. ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால்தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாகமுன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும்.காரணம்,அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல்உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.
சிகிச்சைகள்

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலைதோன்றும்போது,அறுவைச் சிகிச்சைதான்

வழி.லித்தோட்ரிஸ்பி (lithotripsy),பெர்குடானியஸ்நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர்லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ளஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில்மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமதுநோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்டகற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிகமுக்கியம். இப்போது இதற்கான சாத்தியம்50 சதவிகிதமாகஉள்ளது.

விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர்சர். அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சைமுறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்துவருகிறாராம் அவர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now