
இந்தியா - இலங்கை கடற்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில்
புதிய ஆளில்லா உளவு விமானப் படையை ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில்
இந்தியா நிறுவியுள்ளது. இந்த விமானப் படையில் முதல் கட்டமாக 3 ஆளில்லா
விமானங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். கடல் பகுதியை மிகத்
துல்லியமாக படம்பிடித்துத் தரும் திறன் கொண்டதாக இந்த விமானங்கள் உள்ளன.
இலங்கையில் சீனத் தலையீடுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை
இந்தியா மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.