நாளை நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை
மேற்கொண்டு இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பல
ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளதுடன் வடக்கு மற்றும் தெற்கு
பகுதிகளுக்கு விஜயம் செய்து இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும்
அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடவுள்ளார்.
அதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர்
எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில்
நாளை சந்திப்பு இடம் பெரும் என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் உறுதி
செய்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர்
எஸ்.எம்.கிருஷ்ணாஜனாதிபதி , மற்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சரையும்
சந்திக்கவுள்ளார். இவர் பலஸ்தீன் , மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான
விஜயத்தை முடித்துகொண்டு நாளை இலங்கை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த முறை இலங்கை வந்து தமிழ் தேசிய
கூட்டமைப்பை சந்தித்தபோதும் எந்தவொரு முஸ்லிம் கட்சியையும் சந்திக்காது
சென்றமை கடும் விமர்சனங்களை தோற்று வித்திருந்தது. நாளை அவரின் விஜயம்
தமிழர் தரப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது. இந்த முறையாவது
முஸ்லிம் கட்சிகள் அவரை சந்திக்க முயற்சிகளை செய்துள்ளதா ? என்ற கேள்வி
முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்
கலாம் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். இவரை யாழ் பல்கலைகழகம்
மற்றும் தமிழ் நிறுவங்கள் யாழ் அழைத்து சந்திக்கவுள்ளது அதேபோன்று கொழும்பு
, மற்றும் மொறட்டுவ பல்கலை கழகங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஆனால்
முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட தென்கிழக்கு பல்கலைகழகமே அல்லது
முஸ்லிம் நிறுவங்களோ அவரை அழைத்து பேச இது வரை எந்த ஏற்பாடுகளையும்
மேட்கொள்ளவில்லை என்று விமர்சங்கள் எழுந்துள்ளது . இதேவேளை ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமை சந்திப்பார் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது