ஐரோப்பிய தொழிற்சங்கத்தால் 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத இயக்கம் எனப் பட்டியல்படுத்தப்பட்ட “தமிழீழ விடுதலைப் புலிகள்” சார்பான முத்திரைகளை அச்சடித்தமையானது பிரத்தியேக முத்திரைகளை அச்சடிக்கும் திட்டத்தில் ஏற்பட்ட முதலாவது பாரிய தவறு என பிரெஞ்சு தபால் துறையான லா போஸ்ட் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எழுத்துமூலமாக லா போஸ்ட் மன்னிப்பு கோரியுள்ளதுடன் பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்கவிடம் லா போஸ்ட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் பிராங்கோயிஸ் சால்வெட் மற்றும் தந்திரோபாய சர்வதேச பணிப்பாளர் லூயிஸ் விரிகில் ஆகியோர் லா போஸ்ட் சார்பாக நேரடியாகவும் மன்னிப்பு கோரியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.