| மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக இந்தியா முழுவதும் கள்ள நோட்டு கும்பலை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தினர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென் மாநிலங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் கள்ள நோட்டு கும்பல் தலைவன் மாணிக்ஷேக் மற்றும் அவனது நெருங்கிய கூட்டாளி மார்ஜன் ஆகிய இருவரும் சிக்கினர். இவர்களிடம் அதிரடி விசாரணை நடத்திய போது மாணிக்ஷேக் அனுப்பிய ஆட்கள் கள்ள நோட்டுகளுடன் இந்தியா முழுவதும் சுற்றி வந்து புழக்கத்தில் இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் புலனாய்வு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டன. சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். பள்ளிக்கரணை எஸ்களத்தூர் லேபர் காலனியில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளிகள் போர்வையில் பதுங்கி இருந்த அபிபுல் ரகுமான், அப்துல் முத்தலிக், பிரசாந்த மண்டல் ஆகிய 3 பேர் சிக்கினர். இவர்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்து பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து கட்டுகட்டாக கள்ள நோட்டுகளையும் புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்தனர். இவர்களைப் போல டெல்லியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட பகதூர் யாதவ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சயிப் உல்ஹக், அன்வர், உமால் ஷேக், அக்ரம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில் தமிழகத்தில் 2 மாதங்களில் மட்டும் ரூ. 27 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. கள்ள நோட்டு கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:- இந்தியா முழுவதும் நெட்வொர்க் அமைத்து இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய், 500 ரூபாய், 100 ரூபாய் கள்ள நோட்டுக்களை விமானம் மூலம் வங்காளதேசத்துக்கு கடத்தி வருவார்கள். வீசுவார்கள் பின்னர் அந்த நோட்டுகளை வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் வீசி விடுவார்கள். கைது செய்யப்பட்டுள்ள மார்ஷலும் அவனது உதவியாளர்களும் அவற்றை பொறுக்கி எடுத்து நாடு முழுவதும் உள்ள அவர்களது ஏஜெண்டுகளிடம் கொடுத்து அதனை புழக்கத்தில் விடுவார்கள். ரெயில் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் கள்ள நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. மேற்கு வங்காள மாநிலம் மால்டாவைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களை கட்டிட தொழிலாளர்கள் போல் நடிக்க வைத்து கள்ள நோட்டுக்களை விநியோகம் செய்துள்ளனர். உள்ளூர் தரகர்கள் மூலம் பெரிய சந்தைகள், மதுக் கடைகள் ஆகிய இடங்களில் கள்ள நோட்டுகள் நல்ல நோட்டுகளாக மாற்றப்பட்டன. இதில் ஒரு பகுதியை தரகர்கள் எடுத்துக் கொண்டு மீதி தொகையை கள்ள நோட்டு கும்பல் தலைவனின் பெயரில் வங்கி கணக்கில் செலுத்தி வந்தனர். ஒரிஜினல் 500 ரூபாய் நோட்டுக்கு மூன்று 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் ரூ. 49 ஆயிரம் வரை மட்டுமே வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்துள்ளன. `பான்' மற்றும் வருமான வரி பிரச்சினைகளில் இருந்து தப்பவே கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் இப்படி செய்துள்ளனர். இப்படி வங்கி கணக்கில் செலுத்தப்படும் பணத்தை மால்டாவில் உள்ள `ஏ.டி.எம்.' மையத்தில் இருந்து எடுத்துக் கொள்வார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போலி கரன்சிகளை புழக்கத்தில் விட்டு சம்பாதித்துள்ளனர். இந்த கும்பல் தீவிரவாத அமைப்புகளின் பிரதி நிதிகளாகவும் செயல்பட்டு வந்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்து, நாட்டை பலமிழக்கச் செய்வதே, தீவிரவாதிகள் மற்றும் அவர்களை சார்ந்த கும்பலின் குறிக்கோளாக இருந்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் இவர்களின் நோக்கம். தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் போலி கள்ள நோட்டு தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துள்ளனர். வங்கி மற்றும் ஏ.டி.எம்.மில் மேற்கொண்ட பணப்பறிமாற்ற விவரங்களும் பெறப்பட்டுள்ளன. கள்ள நோட்டு கும்பலின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. சென்னையில் நடை பெற்ற வேட்டையில் புலனாய்வு அமைப்பின் டி.எஸ்.பி. சுதர்சன் ரெட்டி, இன்ஸ்பெக்டர் கோதண்ட ராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், செந்தில்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். தென்மண்டல டி.ஐ.ஜி. டாக்டர் ரவிசங்கரின் மேற்பார்வையில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளன. | |||||||||||||||||||
கள்ள நோட்டு கும்பல் : பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை
Labels:
உலகம்




