இந்தியாவில் வரதட்சணை சாவு. மணிக்கு ஒருவர் தீக்குளிப்பு : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் .


திருமண ஏற்பாட்டின்போதே வரதட்சணை உள்ளிட்ட விவரங்கள் பேசி முடிக்கப்படுகின்றன. ஆனாலும், பேராசை கொண்ட மணமகன் மற்றும் மணமகனின் உறவினர்கள், திருமணமான பின்னர், மணமகள் வீட்டில் இருந்து இன்னும் ஏதாவது பிடுங்க முடியுமா? என்று கொடூரமாக சிந்திக்கின்றனர்.
 
மணமகள் வீட்டினர் வசதி படைத்தவர்கள் என்றால் பிரச்சினை கிடையாது. ஏழையாகவோ அல்லது திருமணத்தால் கடனாளியாகவோ மாறிப் போனவர்களின் குடும்பப் பெண்களின் நிலைமையோ சிக்கல்தான்.  
 
மணமகன் வீட்டாரின் பேராசைக்கு பலியாவது அப்பாவி பெண்கள்தான் என்றில்லை, படித்த பெண்களும் தப்புவதில்லை. இந்தியாவில் வரதட்சணைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும் வரதட்சணை கொடுமைகளை தடுக்கவோ, குறைக்கவோ முடியவில்லை.
 
வரதட்சணை சாவுகள் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.   போலீஸ் ஆவணங்களில் பதிவாகி இருக்கும் வரதட்சணை சாவுகள் விவரம் வருமாறு:-
 
கடந்த 2000-ம் ஆண்டில் வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த அல்லது தீ வைத்து எரிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 6995 ஆகும். இதன் எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் 8391 ஆக உயர்ந்துள்ளது. பத்து ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
 
நாட்டில் சராசரியாக மணிக்கு ஒரு பெண் தீக்குளிக்கிறாள். அல்லது தீ வைத்துக் கொளுத்தப்படுகிறாள். வரதட்சணை கொடுமை புகார்கள் ஆண்டு தோறும் அதிகரித்து வந்த போதிலும், இவ்வழக்கில் தண்டனை பெறுபவர்களின் விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.
 
புகார் கொடுக்க பயந்து மூடிய கதவுகளுக்குள் சித்ரவதைகளை லட்சக்கணக்கான இளம்பெண்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now