ராஜஸ்தான்
மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த
பெண்ணின் உடலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான்
மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தின் பீவார் நகரில் உள்ளது அம்ரித் கௌர் அரசு
மருத்துவமனை. அங்கு பிரேத பரிசோதனைக்காக ஜானகி தேவி(24) என்ற பெண்ணின் உடல்
கொண்டு வரப்பட்டது. பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் உடலை
கடந்த 12ம் தேதி இரவு எலிகள் கடித்து குதறியுள்ளன. இது குறித்து தகவல்
அறிந்ததும் அவரது குடும்பத்தார் ஆத்திரமடைந்தனர். மருத்துவமனையின்
கவனக்குறைவால் தான் இவ்வாறு நடந்துள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் இது போன்ற சம்பவம் கடந்த 3 நாட்களுக்கு முன்பும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் இது போன்ற சம்பவம் கடந்த 3 நாட்களுக்கு முன்பும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோத்பூரில்
உள்ள மதுரா தாஸ் மாதுர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது வாதமடித்த முதியவரின் காதுகள், மூக்கு,
உதடுகள் மற்றும் கன்னங்களை எலிகள் கடித்தன. இதனால் அவர் காயம் அடைந்தார்.
இதையடு்தது பணி நேரத்தில் தூங்கிய மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் பணி
நீக்கம் செய்யப்பட்டனர்.