மரக்கறி வகைகளை கூடைகளில் கொண்டுசெல்வதற்கான திருத்தங்களுடன் கூடிய புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர்
சேவைகள் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார்.
மரக்கறிகளை கொண்டு செல்லும் போது பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்டுத்த வேண்டிய
மரக்கறி வகைகளும் வர்த்தமானி அறிவித்தலில் பெயரிடப்பட்டுள்ளதாக அதிகார
சபையயின் தலைவர் குறிப்பிட்டார்.
வர்த்தமானி அறிவித்தலுக்கமைய மரக்கறி கொண்டுசெல்வதற்கான நடைமுறையை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்சூக் மேலும் தெரிவித்துள்ளார்