பாரசீக வளைகுடா கடல் பகுதிக்கு,
அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரு விமானம் தாங்கி கப்பல்கள் விரைகின்றன.
இதனால், அப்பகுதியில் பதட்டமான நிலைமை நிலவி வருகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் போர்ப் பயிற்சி
மேற்கொண்ட கையோடு, அப்பகுதிக்கு அமெரிக்காவின் போர்க் கப்பல் இனி
வரக்கூடாது என, ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில், பாரசீக
வளைகுடா கடல் பகுதிக்கு, அமெரிக்க கப்பல் படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ்.,
கால் வின்சன் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் விரைந்துள்ளது. ஏற்கனவே,
வளைகுடா கடல் பகுதியில் யு.எஸ்.எஸ்., ஜான் ஸ்டென்னிஸ் என்ற போர்க்கப்பல்
நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாய்லாந்து கடல் பகுதியில்
பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் மற்றொரு விமானம் தாங்கி
போர்க்கப்பலான யு.எஸ்.எஸ்., ஆப்ரகாம் லிங்கன் அங்கிருந்து புறப்பட்டு
தற்போது இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்துள்ளது. இதுவும் வளைகுடா கடல்
பகுதிக்கு விரையும் என எதிர்பார்க்கப்படுகிறது.