தனியார் பல்கலைக்கழகங்கள் சட்ட மூலம்
கொண்டுவரப்படவில்லை என்று உயர் கல்வி அமைச்சர் எஸ் பீ திஸாநாயக
தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் போதே
அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தனியார் பல்கலைக்கழகங்கள் ஜே ஆர் காலத்திலேயே கொண்டுவரப்பட்டு விட்டது. இந்த நிலையில், தற்போது புதிதாக ஒன்றும் கொண்டுவர தேவையில்லை.
நாங்கள் மாணவர்களுக்கு கடன் வழங்கும் சட்டமூலத்தையே கொண்டு வந்துள்ளோம். இந்த புதிய சட்டமூலத்தின் மூலம் அவ்வாறு இயங்கிக்கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களின் தரங்களை மேம்படுத்த உள்ளோம். முறைகேடுகளின் ஈடுபடும் பல்கலைக்கழகங்களை தடைசெய்ய உள்ளோம் என தெரிவித்தார்.