இலங்கையை எதிர்கால அறிவுக்கேந்திர மாக மாற்றியமைக்கத் தேவையான மானிட மூலதன அடிப்படையை உருவாக்குவதற்காக மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு (2010) என்ற பந்துரையில் புதிய விசேட வேலைத் திட்டம் ன்வைக்கப்பட்டுள்ளது. அதன் படி நாட்டில் இனிமேல் இருவகையான பாட சாலைகளே இருக்குமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.1000 பாடசாலை வேலைத் திட்டம் என்று முன்பு அழைக்கப்பட்ட இத்தேசிய வேலைத் திட்டம் தற்போது ஆரம்பப் பாட சாலை வலையமைப்புக்காக இடை நிலை ப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத் திட்டம் எனப் பெரியடப் பட்டுள்ளது.
இவ் வேலைத் திட்டம் 2012 இவ்வா ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும். 2016 ஆம் ஆண்டில் நாட்டில் இருவகையான பாடசாலைகள் மட்டுமே இருக்கத்தக்கவாறு எதிர் வரும் 05 ஆண்டுகள் இது நடைறையில் இருக்குமென கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.குணசேகர அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது
இனி மேல் தரம் 1 தல் 5 வரை வகு ப்புகளுக்கான பாடசாலைகளும் தரம் 6 தல் தரம் 13 வரை வகுப்புகளுள்ள பாட சாலைகளும் என இருவகையான பாடசா லைகளே நாட்டில் இருக்கும். இத் திட்டத்தி ற்கென 2012ம் ஆண்டுக்கான வரவு செல வுத்திட்டத்தில் மேலதிக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ் வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டிலு ள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிவுக ளிலும் குறைந்த பட்சம் 2-3 இடை நிலைப் பாடசாலைகள் (தரம் 6- தரம் 13) அபிவி ருத்தி செய்யப்படும். அதேவேளை அதற்கருகிலுள்ள 3-5 எண் ணிக்கையிலான ஊட்டல் பாடசாலைகள் (தரம் 1-தரம்5) இவ்வலையமைப்பில் அபி விருத்தி செய்யப்படும்.
தல் வகைப் பாடசாலையை கருப்பாட சாலை (Core School) என்றும் இரண்டாவது பாடசாலை றைமையை ஊட்டல் பாட சாலை (Feeding School) என்றும் அழைக்கப்படும். இலவசக் கல்வி மற்றும் கட்டாயக் கல்வி யினை சகல மாணவர்க்கும் உறுதி செய்வத ற்காக இவ்விருவகைப் பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இதன் கீழ் 1000 இடை நிலைப் பாடசா லைகளும் 5000 ஆரம்பப் பாடசாலைகளும் அபிவிருத்தியாகுமெனக் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள தரம் 1-13 மற்றும் தரம் 1 – 11 வகுப்புகளைக் கொண்ட (1ஏபி, 1சீ, வகை2) பாடசாலைகள் இவ்வாண்டு முதல் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த் துக் கொள்ள மாட்டார்கள். தரம் 6-13 வகு ப்புகளைக் கொண்ட (1ஏபி, 1சீ, ) பாடசா லைகள் தரம் 6ற்கு புதிய மாணவர்களை சேர்ப்பார்கள்.
தரம் 1-13 மற்றும் தரம் 1-11 வகுப்புக ளைக் கொண்ட (1ஏபி, 1சீ, வகை2) பாட சாலைகள் தம்மிடள்ள 1-5 வரையான வகுப்புக்களை ஒரே தடவையில் இவ்வாண்டில் (சேர்க்காமல்) நீக்கி விடுவதும் ஒரு முறையாகும்.
இதன்படி தரம் 1-13 வரை வகுப்புக ளுள்ள பாடசாலைகள் இவ்வாண்டு தல் ஒவ்வொரு வகுப்பாக தரம் 1 தல் தரம் 5 வரையான வகுப்புகளை நீக்கி வருவர். 2016 இல் மேற்படி பாடசாலைகள் முற்று முழுதாக தரம் 6-தரம் 13 வரையுள்ள இடை நிலைப்பாடசாலைகளாக மிளிரும். இங்கு ஆரம்பப்பாடசாலைப் பிவு ற்றாக ஒழிக் கப்படும்.
இங்கு 2012 இல் தரம் 1 ஐயும் 2013 இல் தரம் 2 ஐயும் 2014 இல் தரம் 3ஐயும் 2015 இல் தரம் 4 ஐயும் 2016இல் தரம் 5ஐயும் நீக்குவர். மேற்படி பாடசாலைகள் ஒரே தடவை யில் முதல் 1-5 வகுப்புக்களை இவ்வாண்டு நீக்கி புதியதொரு மாகாண ஆரம்பப்பாட சாலையை (உத்தேச ஆரம்பப் பாடசாலை) உருவாக்கவும் முடியும். இது பெரிய பாட சாலையின் கனிஷ்ட பாடசாலையாக இய ங்கவும் முடியும்.
தரம் 6-13 வரையுள்ள மாணவர்களைக் கொண்ட இடை நிலைப்பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பிரச்சினையில்லை. ஆரம்ப வகுப்புகளை நீக்க வேண்டிய அவ சியம் இங்கு எழாது. எனினும் 6ம் வகுப் புக்கு மாணவர்களை சேர்க்கும் போது தரம் 5 புலமைப்பசில் தகைமைப்பெற்ற மாணவர்களுக்கும் ஊட் டல் ஆரம்பப் பாடசாலைகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண் டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேசிய பாட சாலையின் ஆரம்பப் பிவிலிருந்து வில கும் ஆசியர்களை இடமாற்றம் செய்யும் போது கல்வி அமைச்சு, மாகாண கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களத்து டன் இணைந்து அதற்குத் தேவையான செய ற்பாடுகளை ன்னெடுத்து புதிய ஆரம் பப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
இசுரு பாடசாலைகள் யாவும் இடை நிலைப்பாடசாலைகளாக அபிவிருத்தி செய் யும் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள் ளது.
இத் திட்டத்தில் உள்வாங்கப்படும் சகல இடை நிலை ஊட்டல் பாடசாலைகள் அபிவிருத்தி செய்வதில் கல்வி அமைச்சு மாகாண கல்வி பொறுப்பாளர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். இத் தேசிய வேலைத் திட்டத்தில் உள் வாங்கப்படாத ஏனைய 4600 பாடசாலைகளும் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அபி விருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்ப டும்.
இத் திட்டத்திற்கான கருப்பாட சாலை, ஊட்டற் பாடசாலை தெயும் பணிகள் கட ந்தாண்டு அந்தந்த மாகாண கல்வித்திணை க்களத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.பூகோள அமைவிடம் பிரதேச வீதித் தொகுதி பொது வசதிகள் மாணவ பாய்ச்சலின் தன்மை பாடசாலைகளின் மாணவர் எண்ணிக்கை, தூரம், கலாசார சுற்றாடல் போன்ற பல்வேறு காரணிகளை அடிப்ப டையாகக் கொண்டே பாடசாலைத் தெவு இடம்பெற்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



