இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி இன்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்:
2013ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நான் விலக வாய்ப்பு இருக்கிறது. 2015ல் நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டிக்கு என்னை தயார் படுத்த வேண்டும். எனது உடல் தகுதியை பொறுத்து ஏதாவது ஒரு தொடரில் முழுமையாக ஈடுபட உள்ளேன்.
இந்த முடிவு தனிப்பட்ட நன்மைக்காக இல்லாமல் நாட்டிற்காக எடுக்கப்பட்டது. என் தனிப்பட்ட கருத்தின்படி உலக கோப்பை விளையாடும் முன் 70 முதல் 80 போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுவரை டோனி 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 36 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பதவியேற்று 17 போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.