கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரை 361 பேருக்கு மரணத்தண்டனை
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்களில் சிலருக்கு பொது மன்னிப்பு
வழங்கப்படவுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில்
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா
நாடாளுமன்றில் எழுப்பிய வாய் மூல வினாவிற்கு பதிலளிக்கும்போதே இது
தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டவர்களில் 356 ஆண்களும் 5 பெண்களும் உள்ளடங்குவதாக மேலும் அறிவிக்கப்பட்டது.
இதில் கொலை வழக்கு தொடர்பில் 348 பேருக்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காக 13 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரணத்தண்டனை தீர்ப்புகள் ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறப்பட்ட பின்னரே அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.