இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 96.4 ஓவர்களில் 257 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த
அணி முதல் நாளான புதன்கிழமை ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 256
ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான வியாழக்கிழமை மேலும் ஒரு ரன் மட்டுமே
சேர்த்த நிலையில், 257 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த
அணியில் மிஸ்பா உல் ஹக் 84 ரன்கள் சேர்த்தார். இரண்டாவது நாளில் பேட்
செய்த அந்த அணியின் சயீத் அஜ்மல், ஜுனைத் கான் ஆகியோர் ரன் கணக்கைத்
தொடங்காமலேயே ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளையும், ஸ்வான் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து
தனது முதல் இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து அணியில் ஸ்டிராஸ் 11 ரன்களுக்கு
வீழ்ந்தாலும், குக்கும், டிராட்டும் சிறப்பாக ஆடி 3-வது விக்கெட்டுக்கு 139
ரன்கள் சேர்த்தனர். டிராட் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டியில்
20-வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட குக், 6 ரன்களில் சதத்தை
தவறவிட்டார். அவர் 10 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்தார்.
2-வது
நாள் ஆட்டநேர இறுதியில் இங்கிலாந்து 84.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு
207 ரன்கள் எடுத்துள்ளது. பெல் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார். பாகிஸ்தான்
தரப்பில் சயீத் அஜ்மல் 3 விக்கெட் வீழ்த்தினார்.