இலங்கை கிரிக்கெட் வீரர்களின் எதிர்கால கிரிக்கெட் தொடர் செலவுகளுக்கு இலங்கை வங்கி 600 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இலங்கை வங்கி பணிப்பாளர் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக இந்நிதியுதவி கிடைத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் காணப்படும் நிதிப் பற்றாக்குறையால் கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
வீரர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவையை பெப்ரவரி 28ம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் 2012 – 2019 தொடர்கள் மூலம் 139 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கும் எனவும் அதனால் எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்படாது எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மார்ச் மாத சம்பளத்தையும் உரியவாறு வழங்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.