ஆப்கானில்
அல்குர்ஆன் எரிப்பு சம்பவத்துடன் 5 அமெரிக்க இரா ணுவத்தினரும் ஒரு
உள்நாட்டு மொழி பெயர்ப்பாளரும் தொடர்பு பட்டிருப்பதாக விசாரணையில் இருந்து
தெரியவந்துள்ளது.
ஆப்கானில் உள்ள நேட்டோ படையின் விசாரணையின் மூலமே இந்த சம்பவத்துடன்
தொடர்புபட்ட வர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இதன்படி இந்த குர்ஆன்
எரிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு வீரர்கள் மீது ஒழுக்க விசாரணை
நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க படைகளின் பக்ரா விமானத் தளத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தை
தொடர்ந்து ஆப்கான் முழுவதும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இதில் 39 பேர் கொல்லப்பட்டதோடு பலருக்கு காயம் ஏற்பட்டது. அத்துடன் 4 அமெரிக்க வீரர்களும் பலியாயினர்.