சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(36) அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக லாகூரில் கடந்த 1998ம் ஆண்டு ஒருநாள்
போட்டியில் அறிமுகமான சைமண்ட்ஸ் 198 ஒருநாள் போட்டியில் விளையாடி 5,088
ஓட்டங்கள்(சராசரி 39.75), 133 விக்கெட் எடுத்துள்ளார்.
மேலும் கடந்த 2004ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் 26 டெஸ்டில் 1,462 ஓட்டங்கள்(சராசரி 40.61), 24 விக்கெட் எடுத்துள்ளார்.
சிறந்த ஆல் ரவுண்டரான சைமண்ட்ஸ் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளது
குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கடந்த 2008ம் ஆண்டில் அவுஸ்திரேலியா
சென்றபோது சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் தன்னை நிறவெறியுடன் இகழ்ந்ததாக
குற்றம் சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்தில் நடந்த டி20 உலக
கிண்ணப்போட்டியின் போது, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் தொடரில் இருந்து
வெளியேற்றப்பட்டார்.
வங்கதேசத்துடன் நடந்த ஒருநாள் தொடரின் போது, அணி ஆலோசனைக் கூட்டத்தில்
பங்கேற்காமல் மீன் பிடிக்கச் சென்றதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.