95,800 பேரிடம் தேசிய அடையாள அட்டைகள் இல்லை

95,800 பேரிடம் தேசிய அடையாள அட்டைகள் இல்லையாழ்.தேர்தல் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களில் 95,800 பேரிடம் தேசிய அடையாள அட்டை இல்லை என யாழ்.உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்தார். பல சந்தேகங்களைத் தோற்றிவித்துள்ள இந்த விடயம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். எனினும், இதில் 95 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் கிடையாது, குறிப்பாக 5 தொடக்கம் 6 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களில் அனைவருக்குமே அடையாள அட்டை இல்லாத பதிவுகளும் உள்ளன.

எனவே, இந்த விடயம் தொடர்பாக விசாரணை ஒன்றினையும் நடத்த தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேபோல் தவறான அடையாள சுமார் 1838 பேரின் அடையாள அட்டைகள் தவறானவை என உறுதிப்படுத்தப்பட்டதனால் இந்த ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திய தகவல்களை 600 பேர் அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆயிரத்து 922 பேரின் அடையாள அட்டைகள் இரண்டு இடங்களில் பதியப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மீது தேர்தல் சட்ட விதிகளின் மூலம் தண்டிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல் மக்களும், கிராம சேவகர்களின் ஒத்துழைப்பின்மையால் பல ஆயிரக்கணக்கான மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்யாமலுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now