
விவாதத்திற்கு அழைத்த மத்திய வங்கியின் ஆளுநர் எங்கே? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே கலாநிதி ஹர்ஷ டி சில்வா எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு இணக்கம் தெரிவித்ததோடு அதற்கான உடன்படிக்கையையும் செய்து கொண்டது.
இது உண்மை. இது தொடர்பில் விவாதம் நடத்த வருமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தேன்.
ஏனென்றால் இதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். ஆனால் இது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் மறுப்பு அறிக்கைகளை விடுத்துக் கொண்டு ஒளிந்து திரிகிறார்.
இந்த நிலையில் அமைச்சர் சியம்பலாப்பிட்டிய விவாதத்திற்கு தயாரென அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவேற்கின்றேன். ஆனால் அமைச்சர் விவாதத்திற்கு இராஜினாமா கடிதத்துடன் வந்தால் நல்லது. ஏனென்றால் உடன்படிக்கையை நான் வெளியிடுவேன் என்றார்.