அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் சாரதிகள் மது அருந்திய நிலையிலோ, உறக்கத்துடனோ வாகனம் செலுத்த வேண்டாம் எனவும் 100 கிலோமீற்றர் வேகத்தை விஞ்ச வேண்டாம் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்;சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தொன்றில் 26 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் 1969 எனும் அவசரசேவை தொலைபேசி இலக்கத்துக்கு அறவிக்கலாம் எனவும் அப்போது  அம்புலன்ஸ், பொலிஸ் அல்லது ஏனைய சேவைகள்கொண்ட குழுவொன்று தேவையான இடத்துக்கு அனுப்பப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அதிகாரி ஒருவர் கூறினார்.

அதேவேளை, சில சாரதிகள் எல் போர்ட்டுடன் வாகனம் செலுத்துவதாகவும் பயணத்திசையை மாற்றி பயணம் செய்வதாகவும் பயணிகள் சிலர் டெய்லி மிரருக்குத்தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்வதற்கான டிக்கெற் வாங்கப்படும்போது இவ்வீதியில் பயணம் செய்யும் சாரதிகளுக்கான சகல ஒழுங்குவிதிகளும் அடங்கிய துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now