கல்முனைக் கடல் நுரையைக் கக்கியது: மக்கள் அச்சம் (படங்கள் இனைப்பு)

கல்முனை கடற்கரையை அண்டிய பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடலில் இருந்து கரையில் ஒதுங்கிய பெருமளவு நுரையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடலில் இருந்து நுரைகள் வெளியேறி காற்றினால் அடித்துவரப்பட்டு கடற்கரையோரங்களிலும் ஊருக்குள்ளும் பரவியதையடுத்து மக்கள் அச்சமடைந்தனர்.

இது தொடர்பில்  மீனவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

'இதுபோன்ற சம்பவங்கள் முன்னரும் பலதடவைகள் இடம்பெற்றுள்ளன. கடல் கொந்தளிப்பு ஏற்படும் காலங்களில் சிலவேளைகளில் சுழிக்காற்று வீசுமானால் இது போன்று நுரைகள் வெளியேறுவது வழமையாகும்.

ஆனால் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்தத்தின் பின்னர் மக்கள் இவ்வாறான விடயங்களில் கூடிய கவனம் செலுத்துகின்றனர்' என்று தெரிவித்தார்.




Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now