புனே ஐ.பி.எல் அணியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க்கை சேர்க்க தீவிர முயற்சி செய்யப்படுகிறது.
புனே அணியின் தலைவர் யுவராஜ் சிங், புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
இவருக்குப்
பதில் ஐந்தாவது ஏலத்தில் பங்கேற்காத வேறு வீரர்களை சேர்த்துக்கொள்ள பெரும்
போராட்டத்துக்குப் பின் இந்திய கிரிக்கட் வாரியம்(பி.சி.சி.ஐ) அனுமதி
தந்தது. இதற்கான வேலைகளில் புனே அணி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
முதல்
முயற்சியாக மைக்கேல் கிளார்க்கை சேர்க்க முயற்சி செய்து வருகிறது.
கிளார்க்கைப் பொறுத்தவரை தொடக்கத்தில் இருந்தே ஐ.பி.எல் போட்டிகளில்
பங்கேற்க மறுத்து வருகிறார்.
இருப்பினும்
இவர் வருகிறாரோ, இல்லையோ கிளார்க்கிடம் பேசிப் பார்த்துவிட முடிவு
செய்துள்ளனர். முடியாத பட்சத்தில் அவுஸ்திரேலிய அணி முன்னாள் அணித்தலைவர்
பொண்டிங்கை சேர்க்கவுள்ளதாக தெரிகிறது.
இது
தவிர தற்போது நியூசிலாந்தில் விளையாடி வரும் தென் ஆப்ரிக்காவின்
ஆம்லாவையும் அணியில் சேர்த்து விட முயற்சிக்கின்றனர். இது தவிர சென்னை,
மும்பை, பெங்களூரு அணியின் சில வீரர்களை இழுக்கவும் முயற்சிக்கின்றனர்.
மொத்தத்தில்
அனைத்து முடிவுகளும் அணியின் ஆலோசகர் மற்றும் தற்போது அணித்தலைவராக உள்ள
கங்குலியை ஆலோசித்து தான் எடுக்கப்படுகின்றன. புதிய வீரர்கள் சேர்ப்பு
குறித்த அறிவிப்பு சில நாட்களில் வெளியாகலாம்.