போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு கடும் தண்டனை
* புதிய சட்ட மூலம் நாளை சபையில்
* புள்ளிகள் வழங்கும் தண்டனை முறை
* 2 ஆண்டுகளில் 24 புள்ளி பெற்றால் லைசன்ஸ் ரத்து
வாகன போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் சாரதிகளுக்கு
கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்டமூலமொன்று நாளை வியாழக்கிழமை
பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு தவறான முறையில் வாகனங்களை
ஓட்டும் சாரதிகளுக்கு புள்ளிகளை கொடுக்கும் நடைமுறைகளின் கீழ் 24 புள்ளிகளை
2 ஆண்டுகளுக்கு கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டிய சாரதிகளின் வாகன ஓட்டும்
அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தி வைப்பதற்கான அதிகாரம் இருக்கிறது.
இந்த நடைமுறையை சாரதிகளின் முன்னேற்ற புள்ளிவிபர கோப்பு என்று
அழைக்கிறார்கள். போக்குவரத்து அமைச்சர் குமார் வெல் கம இந்த புதிய
சட்டவிதிகளை ஏற் கனவே அரசாங்க வர்த்தமானியில் பிர சுரித்துள்ளார்.
8 புள்ளிகளையும் 24 புள்ளிகளுக்கு குறைவான புள்ளிகளை பெறும்
சாரதிகளுக்கு எச்சரிக்கை செய்யும் அதிகாரமும் போக்குவரத்து ஆணையாளர்
நாயகத்திற்கு இருக்கின்றது.
28 புள்ளிகளைப் பெறுபவர்களுக்கு கொடுக்கப்படும் ஓராண்டுகால அனு மதிப்பத்திர தடை விதிப்பு மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படும்.