இந்திய
கிரிக்கட் வீரர் யுவராஜ்சிங்கின் உடல்நிலையில் நாளுக்கு நாள் முன்னேற்றம்
ஏற்பட்டு வருகிறது என அவரது தாயார் ஷப்னம்சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய
கிரிக்கட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்
நுரையீரலில் ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யுவராஜ்சிங்குக்கு
ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யுவராஜ்சிங் குணமடைந்து
விரைவில் விளையாட வருவார் என்று அவரது தாயார் ஷப்னம்சிங் நம்பிக்கை
தெரிவித்துள்ளார்.
மேலும்
அவர் கூறியதாவது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஹீமோதெரபி சிகிச்சை பெற்று
வரும் யுவராஜ்சிங்கின் உடல்நிலையில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு
வருகிறது.
யுவராஜ்
பூரண குணமடைந்து விரைவில் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
யுவராஜ்சிங் குழந்தை பருவத்திலேயே பல்வேறு இன்னல்களை சந்தித்துதான்
முன்னேறி இருக்கிறான்.
புற்றுநோய்க்கு
எதிராக நடக்கும் போராட்டத்தில் இருந்து அவன் மீண்டு வருவான். நான்
யுவராஜ்சிங்குக்கு தாயார் என்று மட்டுமே எல்லோருக்கும் தெரியும், ஆனால்
எனது 18 வயதில் கூடைப்பந்து விளையாட்டில் தேசிய பட்டம் பெற்றுள்ளேன்.
எனக்கு
திருமணம் ஆனதில் இருந்தே கஷ்டப்பட்டுதான் முன்னேறி வந்தேன். அவனை
கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கியதால் யுவராஜ் மேல் பிரியம் அதிகம். தனக்காக
வாழ்வதாக யுவராஜ்சிங் என்னிடம் அடிக்கடி கூறுவான்.
அவனது தந்தைக்கு கிரிக்கட்டில் கிங்காக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை அவரது மகன் யுவராஜ் நிறைவேற்றி உள்ளான் என்றார்.