![]() |
ஊதியம் அதிகரிக்க வேண்டும், வாழ்க்கைச் செலவை குறைத்து தமது கஷ்டங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வலியுறுத்தும் முகமாக ஸ்ரீலங்கா தேசிய வைத்தியசாலை, களுபோவில ஜயவர்தனபுர, கராப்பிட்டிய, கண்டி அநுராதபுரம், குருநாகலை வைத்தியசாலைகள் அடங்கலான நாட்டின் பல வைத்தியசாலைகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இவ்வாரம் தேசிய தொழிற்சங்க நிலையத்தினால் நடத்தப்பட்டு வரும் பல ஆர்ப்பாட்டங்களின் பகுதியே இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆகும்.
தேசிய தொழிற்சங்க நிலையத்தின் ஏற்பாட்டாளரான சமந்த கோறளராச்சி, அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 40 சதவீதத்தால் உயர்த்த வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியதாக கூறினார்.