பால்மாவிற்கான விலை அதிகரிப்பது தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்
எடுக்கப்படவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு
தெரிவித்துள்ளது.
பால்மா உற்பத்தி நிறுவனங்கள் பல்மாவிற்கான விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை தொடர்பில் விலை நிர்ணய கட்டுப்பாட்டு சபையிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய விலை நிர்ணய சபை பால்மாக்களின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை பால்மா கிலோ ஒன்றின் விலையை 37 ரூபாவால் அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அத தெரண மேற்கொண்ட தேடுதலில் தெரியவந்துள்ளது.