முல்லைத்தீவு,
உடையார் கட்டு குரவிலில் பிரதேசத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள்
மீட்கப்பட்டுள்ளன. வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினாராலேயே இவை
நேற்று முன்தினம் (06) மீட்கப்பட்டுள்ளன. 1 60
மி.மீ, லோஞ்சர் -5 , 2கி.கி, கிளைமோர்-1 , ஆர்.பி.ஜி-3, அருள் ஆர்.பி.ஜி –
4, 40 மி.மீ கிறனைட் லோஞ்சர்- 1 3கி.கி, கிளைமோர்- 1 10 கி.கி,
கிளைமோர்-750 கி.கி, கிளைமோர்-5, கைக்குண்டு-2 , டேக்னேற்றர் வயர் 40
மீற்றர் ஆகியனவே மீட்கப்பட்டன.
வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன. இவை தமிழீழ விடுதலைப்புலிகளால்
புதைக்கப்பட்டு வைக்கப்பட்டமை எனத் தெரிவிக்கப்படுகிறது.