உயர்தரப்
பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்
குழு இசெட் புள்ளி முறைமையை பயன்படுத்திய போது ஏற்பட்ட குளறுபடிகள்
தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என பேராசிரியர் றுஃபெல்டா ஓ தட்டில்
குறிப்பிடுகின்றார்.
இலங்கைக்கு இசெட் புள்ளி முறைமையை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான றுஃபெல்டா ஓ தட்டிலே அறிமுகப்படுத்தினார்.
பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய இசெட் புள்ளிகளைக் கணிப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையில் குறைபாடு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய இசெட் புள்ளிகளைக் கணிப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையில் குறைபாடு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தக் குறைபாடு தொடர்பில் அல்லது அதனை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான
நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவில்லை என
பேராசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த விடயம் குறித்து, உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் தலைவரும், தொழிநுட்பம் மற்றும் ஆய்வு அமைச்சின் செயலாளருமான தாரா விஜேத்திலக்கவிடம் வினவினோம்.

இசெட் புள்ளிகள் தொடர்பில் அறிக்கையிடுவது ஜனாதிபதியால் தமக்கு
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என அவர்
குறிப்பிட்டார்.