உலகளாவிய
ரீதியில் பல நண்பர்களை தேடித்தரும் பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் ஒரு
பெண்ணின் விபத்திற்கு காரணமாகியுள்ளது. இச்சம்பவம்பற்றி தெரியவருவதாவது
ரெயிலர் சாயூர் என்ற 18 வயது பெண் நான்கு மணிநேர பயணத்தில் தனது காரை
மணிக்கு 80 மைல் வேகத்தில் ஓட்டியவாறு பேஸ்புக்கில் ஒவ்வொரு 90
செக்கன்களுக்கு ஒரு தடவையும் தனது நண்பர்களுக்காக குறுஞ்செய்திகளை தட்டச்சு
செய்துகொண்டிருந்த சமயம் அவர் பயணித்த கார் விபத்திற்கு உள்ளாகி
சுக்குநூறாகியது.
இதனால் குறித்த பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
தமது பேஸ்புக் நண்பி கொடூர விபத்தில் உயிரிழந்த சம்பவத்தை இணையத்தளம் ஊடாக
அறிந்த அவரது நண்பர்கள் தற்போது அவரது வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி
செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.