![]() |
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை மற்றும் அவர்
தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் கருத்து
வெளியிடும் சுதந்திரம் மற்றும் நீதிக் கட்டமைப்பு சவாலுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளதென அமெரிக்காவின் ஜனநாயகம் தொடர்பான செயற்பிரிவின்
மேலதிக செயலாளர் மைக்கல் எச்.பொஸ்னர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா தொடர்பில் இலங்கை கடைபிடித்துவரும் நீதி நடவடிக்கைகள்
குறித்து அமெரிக்கா மிகவும் அவதானத்துடன் இருப்பதாக அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி வெள்ளை மாளிகை இணையத்தில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை ஒன்று தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போதே மைக்கல் எச்.பொஸ்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்க திணைக்களத்தால் 2010ம் ஆண்டு இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சரத் பொன்சேகா ஒரு அரசியல் சிறை கைதி என பெயரிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமை மற்றும் பொது மக்கள் கருத்து வெளியிடும் சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்துமாறு அமெரிக்கா இலங்கையிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக மைக்கல் எச்.பொஸ்னர் தெரிவித்துள்ளார்.