![]() |
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் நாளை (24) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
தனது இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு செயலாளர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளார்.
நாளை காலை 10 மணிக்கு யாழ். பொது நூலகத்தில் நடைபெறவுள்ள புகைப்பட கண்காட்சியினை கோட்டாபய ராஜபக்ஷ் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
பின்னர் நண்பகல் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது உதவியடன் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட 3 மாடிக் கட்டடத் தொகுதியினையும் திறந்து வைக்கவுள்ளார்.
மேலும் ஊர்காவற்றுறைக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.