
பேரவையின் 47 அங்கத்துவ நாடுகளுக்கும் இலங்கைத் தூதுவர் திருமதி தமாரா
குணநாயகம் எழுதியுள்ள இக்கடிதத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு
ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதரகமும் ஜெனீவாவிலுள்ள சர்வதேச அமைப்புகளும்
அங்ககத்துவ நாடுகளின் ஆதரவை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் தான் நெருக்கமாக செயற்படுவதுபோலவும் பதிலளிக்கும் கடப்பாடு மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு விடயத்தில் ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் கூட்டாக செயற்படுவதுபோலவும் அமெரிக்கா காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
'மிரியம் ஷஹ்ர்ஷார்ட் என்பவர் கையெழுத்திட்டு, அமெரிக்கத் தூதரகத்தினால்
ஐ.நாவுக்கும் ஜெனீவாவிலுள்ள ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்ட
கடிதமொன்று பெப்ரவரி 21 ஆம் திகதி எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
மார்ச் மாதம் அமெரிக்காவின் அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில்
சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்துக்கு அக்கடிதம் ஆதரவு கோரியிருந்தது' என
தமாரா குணநாயகம், அங்கத்துவ நாடுகளின் தூதுவர்களுக்கு எழுதியுள்ள
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் எந்தவொரு தீர்மானம் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கமோ அல்லது
ஜெனீவாவிலுள்ள அதன் தூதரகமோ அமெரிக்காவின் பிரதிநிதிகளுடன் ஒருபோதும்
இணைந்துசெயற்படவில்லை என அவர் கூறியுள்ளார.;