
இலங்கைக்கு விரோதமான சக்திகளுக்கு ஆதரவளிப்பதற்கு மக்களை வீதிக்கு
கொண்டுவரும் முயற்சியாக ஐ.தே.கவும் ஜே.விபியும் அரசாங்கத்துக்கு எதிராக
நாசகார அழிவுப் போராட்டங்களை ஆரம்பித்தாகவும் ஆனால் இலங்கையில் தற்போது
அரசாங்கத்துக்கு எதிரான எழுச்சியொன்று இல்லாத நிலையில் அம்முயற்சிகள்
வெற்றியளிக்காது எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.
இதேவேளை, தலா 10 லட்சம் ரூபா செலவில் கிராம அதிகாரி மட்டத்திலான 14,900
கிராம அபிவிருத்தி திட்டங்கள் மார்ச் 10 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படும்
என அவர் கூறினார்.