புத்தளம் - முந்தல் பிரதேசத்தில் கடத்தப்பட்ட பாலர் பாடசாலை சிறுமி நேற்று புத்தளம் பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் அடங்களாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஆண், குழந்தையின் மாமா என குறிப்பிட்டு சிறுவர் பாடசாலையில் இருந்து குழந்தையை அழைத்துச் சென்றவர் என அஜித் ரோஹண தெரிவித்தார்.
புத்தளம் - முந்தல் பிரதேசத்தில் நேற்று முன்தினம் பகல் மூன்றரை வயதுடைய எஸ்.சுவஸ்திகா எனும் பாலர் பாடசாலையைச் சேர்ர்த இந்தச் சிறுமி இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். இச்சம்பவம் குறித்து நேற்றைய தினம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.