
ஹம்பாந்தோட்டை – முல்கிரிகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கட்சியின்
செயற்பாட்டாளர்களின் கூட்டத்தின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
கட்சியின் தலைமையகத்திற்கு தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு தற்போதைய
நிர்வாகத்தை பற்றி கதைப்பதற்கு உரிமை இல்லை என எதிர்கட்சி தலைவர் ரணில்
விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவரின் தலைமையில் முல்கிரிகல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த
கூட்டத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்
நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச மற்றும் திலீப் வெதஆராய்ச்சி
ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
எனினும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நேற்று
தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

