இந்தியாவின்
நட்சத்திர வீரர் சச்சின் ஓய்வு பெறாமல் காலம் தாழ்த்தி வருவது நல்ல
வீரருக்கு அழகல்ல என்று இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கபில் தேவ்
கூறியுள்ளார்.
இதுகுறித்து
கபில்தேவ் கூறுகையில், உலக கிண்ணத்தை வென்ற கையுடன் சச்சின் ஓய்வை
அறிவித்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். அவர் தற்போது 39 வயதை
தொட்டு விட்டார்.
இந்நிலையில்
சமீபத்திய பின்னடைவு வருத்தம் அளிக்கிறது. சச்சின் நாட்டிற்கு பல நல்ல
சாதனைகளை புரிந்திருக்கிறார். கிரிக்கட்டை மிக நேசிப்பவரான அவரை பலர்
கிரிக்கட்டிலிருந்து விலக விடாமல் தடுக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

