பொருளாதார அமைச்சின் கீழ்
உள்ள மீள் எழுச்சிக் குழுக்களை ஒன்றிணைத்து ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்
தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானத்தைத் கண்டிக்கும் முகமாக
நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு அரச
தரப்பினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் என்று பிரதேச மக்கள்
தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
மின்சார வசதியில்லாத பகுதிகளுக்குச்
சூரிய மின்கலம் வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும்
இயந்திரங்கள் வழங்கப்படும் என்றும் அரச காணிகளில் உள்ள மக்களுக்கு சொந்தமாக
உறுதிகள் பெற்றுத் தரப்படும் என்றும் மீள் எழுச்சிக் குழுக்கள் ஊடாக
மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது.
இதற்காக நாளை காலை கிளிநொச்சி நகரில்
மக்களை ஒன்றுகூடுமாறும் அதற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படும்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|
அரசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நாளை கிளிநொச்சியில் நடத்த ஏற்பாடு
Labels:
அரசியல்