மின்சாரக்
கட்டணத்தை அதிகரிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என மின்சக்தி
எரிசக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர இன்று பாராளுமன்றத்தில்
தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வாய்மூலம்
கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்துப் பேசும்போதே பிரதியமைச்சர்
இவ்வாறு கூறினார்.
நாட்டின் மின்சாரத் தேவைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி செய்வதற்காக பல
திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்சார உற்பத்திக்கான செலவூகள்
அதிகரித்துள்ளபோதும் பொது மக்களுக்கு சிரமம் எற்படாதவாறு கட்டணம்
அறவிடுவதில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது. அரசாங்கத்தின்
குறிக்கோளும் அதுவாகும்.
சிரமமில்லாத கட்டண முறையை தொடர்ந்தும் கடைப்பிடிக்கவே அரசாங்கம்
உத்தேசித்துள்ளதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாதென பிரதி
அமைச்சர் கூறினார்.