எனினும், இதற்குப் பதிலளித்த பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்வது தொடர்பில் சட்ட மாஅதிபருடன் கலந்தாலோசித்து வருவதாக தெரிவித்தனர்.
துமிந்த சில்வாவைக் கைதுசெய்வதற்காக சட்ட மாஅதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாட வேண்டிய தேவை இல்லையென இன்றைய வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணி அஜித் பத்திரண கூறினார்.
இந்த வழக்கில் துமிந்த சில்வாவை சந்தேகநபராக பெயரிடுவதற்கு தாம் மேற்கொண்ட தீர்மானத்தில் தொடர்ந்தும் மாற்றம் இல்லை என நீதவான் தெரிவித்தார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்களும், கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களை மார்ச் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.