வணிகம்
செய்வதற்கு வசதியாக உள்ள நாடுகள் தரப்படுத்தலில் இந்த ஆண்டு சிங்கப்பூர்,
முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஹொங்கொங், நியூசிலாந்து,
ஆகிய நாடுகள் இரண்டாம் மூன்றாம் இடத்தில் உள்ளன. ஐக்கிய அமெரிக்கா இந்த
பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.
இதேவேளை இந்த ஆண்டின் வணிகம் செய்வதற்கு
வசதியாக உள்ள நாடுகளின் தரப்படுத்தலில், இலங்கை ஒன்பது படி
முன்னேறியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள்
காட்டுகின்றன.
ஒரு நாட்டில் வணிக முயற்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கு
ஏற்படும் காலதாமதம், கீழ்கட்டுமான வசதிகள், முதலீட்டாளர் பாதுகாப்பு, கடன்
வசதிகள் மற்றும் பிற தடைகளின் அளவினை அடிப்படையாகக் கொண்டு ‘வசதியாக வணிகம்
செய்வதற்கான சுட்டியினை உலக வங்கி கணிப்பிட்டு வருகின்றது. இதன் மூலம் உலக
நாடுகளை தரப்படுத்தி, அவற்றின் முன்னேற்றங்களையும் வெளிப்படுத்தி
வருகின்றது.
கடந்த ஆண்டு உலகின் 183 நாடுகளின்
பட்டியலில் 98 ஆவதாக காணப்பட்ட இலங்கை, இந்த ஆண்டு 89ஆவது இடத்திற்கு
வந்து ஒன்பது படிகளால் முன்னேறியுள்ளது. எனினும், கடந்த ஆண்டுடன்
ஒப்பிடுகையில், இலங்கையில் வணிக முயற்சி மற்றும் சொத்துக்களை பதிவு
செய்யவதற்கு எடுக்கும் காலம், கட்டிடங்கள் அமைப்பதற்கான அனுமதி பெறுதல்,
கடன் வசதியினை பெறுதல், வரி செலுத்துதல் போன்றனவற்றில் உள்ள சிக்கல்
தன்மைகள் இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் புள்ளிவிபரங்கள்
சுட்டிக் காட்டுகின்றன.
இந்த பட்டியலில் இந்தியா 132ஆவது இடத்தில் உள்ளது.
http://www.doingbusiness.org