அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் இயங்கிவரும் மிஹின் லங்கா
விமான சேவை, 2007 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 6600 மில்லியன் ரூபாய்கள்
நட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு மார்ச் 31 முதல் 2012 ஜனவரி 31 வரை மாத்திரம் மிஹின்
லங்கா 1700 மில்லியன் ரூபாய் நட்டத்தை அடைந்துள்ளதாக அதன் மேலதிகாரி கபில
சந்திரசேன தெரிவித்துள்ளார்.
மிஹின் லங்காவினால் இலாபத்தை ஈட்டமுடியவில்லை என்ற போதிலும், அதன் சேவை சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய விமான சேவைகளை காட்டிலும் மிஹின் லங்கா குறைந்த பயணக்கட்டணங்களையே அறவிட்டு வருவதாகவும் கபில குறிப்பிட்டுள்ளார்.