ஜனநாயக நாடு என்ற ரீதியில் எந்தவொரு ஆணைக்குழு விசாரணைக்களுக்கும் பதிலளிக்க அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாக வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவிக்கின்றார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட ஆலோசனைகள் கோரப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இருந்தபோதிலும் இந்த விடயத்தில் அவசரப் போக்கினை கடைப்பிடிக்க அரசாங்கம் விரும்பவில்லை என்பதுடன் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டியுள்ளதாகவும் வெளிவிவகார பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.