அரசாங்கம்
எரிபொருள் விலையேற்றத்தின் முழுமையான சுமையை மக்கள் மீது சுமத்தியதுமில்லை
எதிர்காலத்தில் சுமத்தப் போவதுமில்லை என அமைச்சரவைப் பதில் பேச்சாளர்
அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்கம் டீசல் ஒரு
லீற்றருக்கு 26 ரூபாவையும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றருக்கு 36 ரூபாவையும்
தற்போது மக்களுக்கு மானியமாக வழங்கி வவருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச
சந்தையில் எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து இலங்கையிலும் விலை
அதிகரிக்கப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப்
பதிலளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது
தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் ஏனையயநாடுகளுடன் ஒப்பிடுகையில்
இலங்கை மக்களுக்குப் பல வழிகளிலும் அரசு நிவாரணங்களை வழங்கி வருகிறது.
சமுர்த்தி, உரமானியம் மின் கட்டணச் சலுகை, எரிபொருள் மானியம் என பலவற்றை
இதில் குறிப்பிட முடியும்.
பொருளாதாரம்
சம்பந்தமாக நாம் பேசும்போது அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் மானியங்கள்
பற்றியும் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சர்வதேச
நாணய நிதியம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த
அமைச்சர் சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் இலங்கைக்கு அழுத்தம்
கொடுத்ததில்லை. கொடுக்கப் போவதுமில்லை.
எமது
நாட்டின் செயற்பாடுகளுக்குகேற்ப திறைசேரியும் மத்திய வங்கியும்
காலத்துக்குக் காலம் சில உபாய வழிகளை மேற்கொள்ளும். அதனை சரி அல்லது தவறு
என விமர்சிக்க முடியாது.
நாணய
நிதியத்தின் 2ம், 3ம் தவணை கடனுதவியைப் பெறுவதிலும் சுதந்திரமாக
தீர்மானமெடுக்கும் உரிமை அரசாங்கத்திடம் உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.
நாம் 60, 70 காலகட்டங்களில் இருந்த சர்வதேச நாணய நிதியத்தைப்போல இப்போது பார்க்கக்கூடாது.
பொருளாதாரம்
நாடுகளுக்கிடையிலான மாற்றங்கள் தொடர்பில் அவதானத்தைச் செலுத்தும். நிதியம்
அதற்கேற்பவே முடிவுகளை எடுக்கும் என்பதே எமது நம்பிக்கை எனவும் அமைச்சர்
மேலும் தெரிவித்தார்.