இலங்கையில்
இருந்து புலம் பெயர்ந்து ஐந்து ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பக்கூடிய 420 பாடசாலைகளை நடத்தி வருவதாக
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு இரகசியத் தகவல்கள்
கிடைத்துள்ளன.
எதிர்காலத்தில்
தமிழ் மக்களிடையே எல்.ரி.ரி. யின் பிரிவினவாத அரசியல் சித்தாந்தத்தை
முன்னெடுத்துச் செல்வதற் காகவே வெளிநாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்கள்
இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
எல்.ரி.ரி.ஈ. கொள்கையைப் பரப்பும் இந்தப் பாடசாலைகள் ஜேர்மனி,
சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில்
நடத்தப்படுகின்றன. இவற்றில் நான்கு வயது முதல் 20 வயதுக்கிடையிலான சுமார்
20 ஆயிரம் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். இத் தகவல்களின்படி
ஜேர்மனியில் 145 பாடசாலைகளும், சுவிற்சர்லாந்தில் 133 பாடசாலைகளும்,
டென்மார்க்கில் 65 பாடசாலைகளும், பிரான்ஸில் 52 பாடசாலைகளும்,
நெதர்லாந்தில் 25 பாடசாலைகளும் நடத்தப்படுவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக
நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்ஸ்மன் ஹ¤லுகல்ல தெரிவித்தார்.
இந்த
மாணவர்களுக்கு எல்.ரி.ரி.ஈ.யினரின் கொள்கைகளை வெளிநாடுகளில் பரப்பும்
நோக்கத்துடனும், வருமானத்தை திரட்டும் நோக்கத்துடனும் இப்பாடசாலைகள்
நடத்தப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த ஒவ்வொரு மாணவரிடமும்
அறவிடப்படும் கட்டணம் எல். ரி. ரி. ஈயின் சர்வதேச வலையமைப்பின் நிதியத்தில்
சேர்க்கப்படுகின்றது. இந்தப் பாடசாலைகளை தமிழ்ச்சோலை பாடசாலைகள் என்று
அழைக்கின்றார்கள். ஐரோப்பாவில் மாத்திரம் 350 க்கும் அதிகமான தமிழ்ச்
சோலைப் பாடசாலைகள் இருக்கின்றன. இவற்றுக்கு எம். கே., ரி. கே. என்.,
அப்ரிக் மற்றும் அன்னைபூபதி என்று பெயரிடப்பட்டுள்ளன.
எல்.ரி.ரி.ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருந்த காலகட்டத்தில்
செஞ்சோலை என்ற பெண்களுக்கான இரண்டு ஆதரவற்றோருக்கான இல்லங்களும், காந்த
ரூபன் அறிவுச் சோலை என்ற ஆண்களுக்கான ஆதரவற்றோர் இல்லமும் நடத்தப்பட்டது.
இவை ஊடாக எல்.ரி.ரி.ஈ.ஐ ஆதரிக்கும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை
எல்.ரி.ரி.ஈ. போராளிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக நடத்தப்பட்டவை.
எனினும் வெளியுலகிற்கு அவை சுதந்திர சமூக நல்வாழ்வுக் குழுக்களினால்
நடத்தப்படும் ஆதரவற்றோர் இல்லங்கள் என்று காண்பிக்கப்பட்டதாக லக்ஸ்மன்
ஹ¤லுகல்ல தெரிவித்தார்.
இந்த
தமிழ்ச்சோலைப் பாடசாலைகளில் மாணவர்களிடம் இருந்து ஒரு பாடத்திற்கு 8 முதல்
25 யூரோவை கட்டணமாக அறவிடுகின்றார்கள். சிங்களவர்களுக்கு எதிராக பகைமை
உணர்வையும் பழிவாங்கும் உணர்வையும் கட்டியெழுப்புவதற்கு இந்தப் பாடசாலைகள்
பெரும்பங்கை வகிக்கின்றன என்றும் அறிவிக்கப்படுகிறது.