இலங்கையின் ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சி
பெற்றோலிய விலையில் 49 வீத அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்
இலங்கையில் பாரிய போராட்டங்கள் ஏற்ட்டுள்ளதாகவும் தேயிலை ஏற்றுமதியில்
ஏற்ட்டுள்ள தடையும் இலங்கையில் இருதரப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக
அல்ஜசீராவின் ஆய்வு கூறுகிறது.
நாட்டில் அரிசி விலையும் உயர்த்தப்படக்
கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள்
விலையேற்றத்தின் எதிரொலியாகவே அரசியின் விலை உயர்த்தப்பட உள்ளதாகக்
குறிப்பிடப்படுகிறது.
கிலோ ஒன்றுக்கு நான்கு ரூபா வீதம்
அரசியின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசி விலையை
உயர்த்துவதனைத் தவிர வேறு வழியில்லை என அரிசி உற்பத்தியாளர்களும், அரிசி
ஆலை உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர். அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை
நிர்ணயிக்கப்பட்டால் உற்பத்தியை வரையறுக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.