நாட்டில் பேரினவாத கடும் போக்கு
தொடருமானால் சர்வதேச நாடுகளின் தலையீடுகளை தடுக்க முடியாது என்று புளொட்
அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவுக்கு 18 இலட்சத்திற்கும் மேலதிகமான மக்களின் ஆதரவு
கிடைத்துள்ளது.
எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு
தடங்கலின்றி தீர்வை வழங்கடியு மென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பந்துரைகள் அமுல்செய்யப்படக் கூடாதென
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிகஹெல உறுமய கூறியிருப்பது தொடர்பாக
கருத்து வெளியிடும் போதே சித்தார்த்தன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது பக்கச் சார்பில்லாது அனைத்து
தரப்பினரது தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளதோடு அதற்கான பரிந்துரைகளையும்
வழங்கியுள்ளது. ஜனாதிபதியே நல்லிணக்க ஆணைக் குழுவை நியமித்தார். எனவே இதன்
பரிந்துரைகளை நடைறைப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். எனவே பேரினவாத கடும்
போக்காளர்களின் பிடிக்குள் ஜனாதிபதி சிக்கிவிடலாகாது.
அவ்வாறு சிக்குவாரானால் பாதிக்கப்பட்ட
தமிழ் மக்கள் சர்வதேசத்தின் உதவியை கோரும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது
தவிர்க்க முடியாத தார்மீகக் கட்டாயமாகும். இவ்வாறானதோர் சூழ்நிலையில்
நாட்டுக்குள் சர்வதேசத்தின் தலையீடுகளை அதிகரிக்கும். அப்போது சர்வதேசம்
தலையிடுகிறதே எனக் கூச்சலிடுவதால் பலனில்லை. எனவே நாமாகவே எமது பிழைகளை
திருத்திக் கொள்ள வேண்டும். விசேடமாக ஜனாதிபதிக்கு 18 இலட்சத் திற்கும்
மேலான மக்கள் ஆதரவு உள்ளது. மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கம்
உள்ளது.
இதனால் தைரியமாக பேரினவாதிகளுக்கு
அஞ்சாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும்.
அதேபோன்று நல்லிணக்க ஆணைக் குழுவின் பந்துரைகளையும் நடைறைப்படுத்த
முடியும். பரிந்துரைகளை நடைறைப்படுத்தும் போது விசேடமாக உயிரிழந்தவர்கள்
மற்றும் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.


